Wednesday, July 1, 2020

நம் பலம், எதிரியின் பலம்...இவற்றை சரியாக அளவிட்டு போரிட்டால் எந்த போரிலும் வெற்றிகொள்ள முடியும்.

பிலிப்பைன்ஸ் தீவில் இருந்த ஆதிகுடிகள் வாழ்நாளில் இதுநாள் வரை கண்டிராத காட்சியை கண்டார்கள். நாலு பெரிய கப்பல்கள், அதில் ஏராளமான பீரங்கிகள், துப்பாக்கி ஏந்திய வெள்ளை மனிதர்கள், உடலெங்கும் இரும்புக்கவசம், கையில் இரும்பால் ஆன வாள், ஈட்டி, பயோனெட்டுகள்....

ஆதிகுடிகளிடம் இருந்தது மூங்கிலால் ஆன அம்புகள், வேல், வில் அம்புகள் தான்.

கப்பலின் மாலுமி மெகெல்லன்....உலகை முதலில் சுற்றி வந்தவர். கொலம்பஸை மிஞ்சும் கேப்டன்.

"ஸ்பானிய அரசரை தலைவராக ஏற்றுக்கொண்டு கப்பம் செலுத்தினால் மன்னித்து விட்டுவிடுகிறேன்" என்றார்.

இன்று ஒரு ஏலியன் விண்கலம் நாம் கண்டிராத ஆயுதங்களுடன் வந்து நம்மிடம் சரண்டைய சொல்வதுபோல் தான் அது. பீரங்கிகள் விண்ணில் வெடித்து பயம் காட்டின, துப்பாக்கிகள் சுடபட்டன.

வேறு யாராக இருந்தாலும் சரணடைந்து உயிர்பிழைத்திருப்பார்கள்.

ஆனால் பூர்வகுடிகளின் தலைவன் லாபு-லாபு மாவீரன் மட்டுமல்ல, மிக சிறந்த ராஜதந்திரியும் கூட

வாழ்நாளில் இதுநாள்வரை கண்டிராத ஆயுதங்களை கண்டாலும் விரைவில் அவற்றை எடைபோட்டார்.

கப்பலில் இருக்கும் பீரங்கிகளை தரையில் இறக்கமுடியாது. தரையில் முழுக்க பாறைகள். பீரங்கிகள் ரேஞ்சில் அவர்கள் குடியிருப்பு இல்லை.

துப்பாக்கிகள் தான் பயமுறுத்தின. ஆனால் அவற்றை தான்டி அவர்களை நெருங்கினால் ஸ்பானியர்களின் கவசம் இருக்கிறது. ஆனால் அவர்களின் கால்களில் கவசம் இல்லை.

மேலும் மெகல்லன் கம்பீரமாக இருந்தார்...அவர் ஒரே ஒருவரை வீழ்த்தினால் போதும். போரில் வென்றுவிடலாம்.

கணக்குபோட்டு சரண்டைய மறுத்தார் லாபு-லாபு

போர் துவங்கியது..

கணக்குபோட்டது போல் பீரங்கிகளால் கரையில் இருப்பவர்களை சுட முடியவில்லை. படகுகளில் ஏறி 135 ஸ்பானியர்கள் கரைக்கு துப்பாக்கியால் சுட்டபடி விரைந்தார்கள்.

முதலில் துப்பாக்கி படை கரை இறங்கியது. அவர்கள் அங்கிருந்தபடி பூர்வகுடிகளை நோக்கி சுட்டார்கள்.

துப்பாக்கி ரேஞ்சை அழகாக கணக்கிட்டு அதற்கு கொஞ்சம் தள்ளி, தள்ளி தன் படைகளை நிறுத்தினான் லாபு-லாபு. அரைமணி நேரம் சுட்டபின் குண்டுகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன.

அதன்பின் தன் 1500 வீரர்களிடம் ஒரே கட்டளை மட்டுமே பிறப்பித்தார் லாபு-லாபு

"வேகமாக ஓடுங்கள். 1500 பேரும் குறிவைத்து மெகல்லன் ஒருவரை மட்டுமே கொல்ல முயலவேண்டும். வேறு யாரையும் தாக்ககூடாது. ஸ்பானியர்கள் குறுக்கே வந்தால் அவர்கள் கால்களில் அம்புவிடுங்கள், ஈட்டியால் குத்துங்கள்.."

1500 பேரும் பாய்ந்தார்கள்...ஸ்பானியர்கள் அலட்சியமாக மூங்கில் ஈட்டிகளை கவசம், பயோனெட்டை வைத்து தடுக்க, ஈட்டிகள் அவர்கள் கால்களில் இறங்கின. வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல நேராக மெகல்லனை நெருங்கி ஈட்டியால் காலில் ஒரு குத்து. அவர் கீழே விழுந்தார். விஷ அம்பு ஒன்றை காலில் ஏவி அவர் கதையை முடித்தார்கள்.

மீதமிருந்த ஸ்பானியர்கள் அதன்பின் துண்டை காணொம், துணியை கானோம் என படகுகளில் ஏறி கப்பலுக்கு தப்பி ஓடினார்கள். மெகெல்லன் பிணமாக பூர்வகுடிகளிடம் இருந்தார். தட்டுதடுமாறி ஸ்பானியர்கள் அதன்பின் ஸ்பெயின் வந்து சேர்ந்தார்கள்.

அதன்பின் 44 ஆண்டுகள் லாபு-லாபு உயிருடன் இருந்தவரை பிலிப்பைன்ஸை வெற்றிகொள்ள முடியவில்லை. 

இன்று அவர் பிலிப்பைன்ஸின் தேசிய ஹீரோ. பிலிப்பைன்ஸில் அவரது சிலைகளை பல இடங்களில் காணலாம். 

மூங்கிலை ஆயுதமாக கொண்ட குடிகளில் இருந்து இப்படி ஒரு ராஜதந்திரியும், மாவீரனும் உருவாவார்கள் என யாரேனும் கற்பனையாவது செய்து பார்த்திருக்க முடியுமா?

நம் பலம், எதிரியின் பலம்...இவற்றை சரியாக அளவிட்டு போரிட்டால் எந்த போரிலும் வெற்றிகொள்ள முடியும்.

Thursday, June 18, 2020

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்


முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான். மகாராசாதி ராச ஸ்ரீபரமேசுவரன்,எம்மண்டலமும் கொண்டருளியவன்,எல்லாம் தலையானான் பெருமாள், கச்சி வழங்கும் பெருமாள்கோதண்டராமன் போன்ற பட்டப்பெயர்களினைப் பெற்றான். இவனது காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியதாகக் கருதப்படுகின்றது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த இவன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் சிறப்புற்று விளங்கினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் இறுதிச்சோழ மன்னனாக அறியப்படும் மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் சோழர் வம்சம் முற்றிலும் அழிந்ததற்கான காரணங்களில் இம்முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் சோழ நாட்டுப் படையெடுப்பும் ஒரு முக்கிய காரணம்
  • கண்ணனூரில் நடைபெற்ற கொப்பத்துப் போரில் போசாள மன்னன் வீரராம நாதனை தோற்கடித்து அவன் தளபதி சோமன் என்பவனைக் கொன்றான்.
  • இலங்கையின் திரிகோணமலையில் ஆட்சி செய்த தம்பர்லிங்கா(தாய்லாந்து) அரசன் சந்திரபானுவின் மீது படையெடுத்து வெற்றி பெற்று யானைகள் மற்றும் மணிகள் அனைத்தினையும் திறையாகப் பெற்றான்.
  • பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கனை போரில் வென்று அவனது தலைநகரான சேந்தமங்கலத்தை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். பல்லவ மன்னனின் யானை,குதிரை மற்றும் பிற செல்வங்கள் அனைத்தினையும் கவர்ந்து கொண்டு சேந்தமங்கலத்தினை ஆளும் பொறுப்பினைக் கோப்பெருஞ்சிங்கனிடமே அளித்தான்.
  • தெலுங்குச் சோழ மன்னனான விசயகண்ட கோபாலனை போரில் கொன்று காஞ்சிமாநகரைக் கைப்பற்றி விசயகண்ட கோபாலனின் தம்பிக்கு ஆட்சிப் பொறுப்பினை அளித்தான். வடநாடு சென்று காகதீய மன்னன் கணபதியைப் போரில் வென்றான். நெல்லூரைக் கைப்பற்றி வீராபிடேகம் செய்துகொண்டான்.

Monday, June 15, 2020

இன்னக்கி எல்லா ஊருக்கும் எப்புடி பஸ் ஓடுதுன்னு தெரியுமா ?


1962ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில், ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது. அப்போது, பொது போக்குவரத்தை அரசுடமை ஆக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வருகிறார் தலைவர் கலைஞர். "சோசியலிஸ்ட்" காமராசரால் தீர்மானம் தோற்கடிக்கப்படுகிறது. 

1967ல் திமுக வெற்றி பெற்று பேராசான் அண்ணா முதல்வராகிறார். தலைவர் தான் பொதுப்பணித்துறை & போக்குவரத்து துறை அமைச்சர். 

ஒரு கி.மீக்கு 6 பைசா என்று இருந்த பேருந்துக் கட்டணத்தை ஒரு கி.மீக்கு 5 பைசாவாக குறைக்கிறார். அடுத்து, பொது போக்குவரத்தை அரசுடமை ஆக்குகிறார். 

காமராசரால் மறுக்கப்பட்ட ஒரு திட்டத்தை, வெற்றிகரமாக நிறைவேற்றியவர் கலைஞர். 

இன்று தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா ஊர்களுக்கும் பொது போக்குவரத்து சென்று சேர்ந்திருப்பதற்கு கலைஞர் மட்டுமே காரணம்.

- தெற்கிலிருந்து ஒரு சூரியன்.

#மாஸ்க் பற்றி ஒரு அலசல்போலீசுக்கு பயந்து வாங்கறீங்களா இல்ல கொரோனா வுக்கு பயந்து மாஸ்க் போடுறீங்களா???



நாம் போடுகிற மாஸ்கின் தன்மை பற்றி இதோ விரிவாக.....

N 95 மாஸ்க் , இல்ல சர்ஜிகல் மாஸ்க் - இது ரெண்டு தவிர வேற எதாலயும் கொரோனா வைரஸ்ஸ தடுக்க முடியாது..

பாவாட துணிலயும் , பனியன் துணியிலயும் , போர்வை துணிலயும் மாஸ்க் போட்டுகிட்டு கொரோனாவ -  வாடா வாடா வந்து பாருடான்னு சண்டைக்கு கூப்டுகிட்டு இருக்கோம்.. சாதாரண வைரஸ்ஸ விட மூன்றில் ஒரு பங்கு சிறியது கொரோனா .. துணியில் இருக்கும் துளைகள் கொரோனாக்கு பொருட்டே இல்லை ..உடனே பரவி விடும்...  N95 மாஸ் எல்லாராலும் வாங்க முடியாது ..தரமானது ஆரம்ப விலையே 300 ஐ தாண்டும்..ஆனால் சர்ஜிகள் மாஸ்க் ஒன்று 5 ரூபாதான்..ஒன்ஸ் யூஸ்
.தினமும் ஒன்ன யூஸ் பண்ணிட்டு டிஸ்போஸ் பண்ணிடலாம்.. மற்ற துணி மாஸ்க்குகள் எந்த விதத்திலயும் நம்மைக் காப்பாற்றாது..தூசி மட்டுமே உள்ளே போகாமல் தடுக்கும்..வைரஸ் - பாக்டீரியாவைத் தடுக்காது... 

நாம யாருமே கொரோனாக்காக மாஸ்க் போடல.. போலீஸ்ஸுக்கு பயந்துதான். போடரோம்..அதுவும் 10 ரூபாய்க்கு துணி மாஸ்க் வாங்கி , ஒரு மாசத்துக்கு தொவைச்சு யூஸ் பண்ணிகிட்டு இருக்கோம்..இது ஆபத்தானது.. உண்மையச் சொன்னா மாஸ்க்குக்கு எல்லாம் கட்டுப்படர  ஜீவன் இல்ல கொரோனா ..

நம்ம ஊருல அதிகம் பரவல..அதால போலீஸ்க்கு கணக்கு காட்ட வேனும்னா இந்த துணி மாஸ்க்குகள் பயண்படலாம்..ஒரு வேளை பரவிருச்சுனா - துணி மாஸ்க்குகள் உயயோகிக்காதீர்.. ரீ யூஸ் பண்லாம்கிரத தவிர வேற யூஸ் இல்ல..

ராம்ராஜ்ல இருந்து - பூமர் கம்பெனி வரைக்கும்.- இன்னிக்கு டிவில மாஸ்க் விளம்பரம் போடராங்க..இவங்க தயாரிச்ச மாஸ்க் பாதுகாப்பானதுன்னு எங்க அப்ரூவல் வாங்கிருப்பாங்க ? இண்டியன் மெடிக்கல் சர்டிபிகேட் இருக்கா ? எதுவும் இல்ல.. டிசைனா - ரிச்சா தெரியும்..அவ்வளவுதான்.. மக்கள் அறியாமையும் பதட்டத்தையும் பயண்படுத்தி சீசன் பிஸ்ணஸ் அவ்ளோதான்..

இது நா சொல்லல..உலக சுகாதார அமைப்பு விட்ட அறிக்கை.. வெளிய தெரியாம வச்சுக்கிரதுல மீடியாவும் முக்கிய பங்கு வகிக்குது.. கொரானா எங்கயும் இல்ல..நம்மள சுத்தி நெருங்கிகிட்டு இருக்கு.. தினம் 10 ந்னு சொன்னப்ப பயந்த நாமதான் இப்ப தினம் 1000 + ந்னு சொன்னாலும் ஜஸ்ட் ஒரு நியூஸ்ஸா கடந்து போரோம்..எங்க போய் முடிம்னு தெர்ல..

அரசு இயந்தரத்துக்கு மக்கள் சாவு ஒரு கணக்குதான்.. அதுக்கு அரசாங்கம் என்ன பண்ணும் ? பரிதாபப்பட மட்டுந்தா முடியும்.. நாம இல்லன்னா நம்ம குடும்பம் இல்லன்னு இருக்கிர நிலமைல கவனமா இருந்துக்கு வேண்டியது யாரு ?

கொரொனாவும் - ஆக்ஸிடெண்டும் ஒன்னுதான்..நாம என்னதான் கவனமா டிரைவிங் பண்ணாலும் ஆப்போஸிட்ல வர்ரவன் அடிச்சு தூக்கிருவான்.. அதுதான் இப்பவும் நடந்துகிட்டு இருக்கு..

சொல்லவே கஸ்டமா இருக்கு.. அமெரிக்கா சீனா இத்தாலிய மிஞ்சும் பாதிப்புகள் இந்த மாதத்தில் இருந்து துவங்கபட வாய்ப்பிருக்கு... 
வறுமைக்கும், கடனுக்கும், வாடகைக்கும் பயந்து தொழில் பண்ணியே ஆகனும்கிர நிலைமைல இருக்கிர நமக்கு காசு மட்டுந்தா கண்ணுக்கு தெரிது.. கூடவேதான் சாவும் வருதுங்கிரது புரிஞ்சுக்க வேண்டிய உண்மை..

2020 தாண்டிட்டா லைப் டைம் செட்டில்மென்றான்னு  கடவுள் டாஸ்க் வச்சுருக்கார் போல..
மும்மத கடவுள வேண்டியும் புரயோசனம் இல்ல.

நானும் இது தெரியாமல் துனியால் செய்யப் பட்ட மாஸ்கை தான் துவைத்து போட்டு பயன் படுத்தி வந்தேன்.
ஆனால் சர்ஜிக்கல் மாஸ்க் நூற்றுக்கணக்கில் வைத்திருக்கேன் இனி அதைத்தான் பயன் படுத்தனும்.

Saturday, June 13, 2020

O க்ரூப் ரத்தம் இருப்பவர்களுக்கு கொரோனா வராது / மிக அரிதாக வரும்


O க்ரூப் ரத்தம் இருப்பவர்களுக்கு 
கொரோனா வராது / மிக அரிதாக வரும்
என்று ஒரு அமெரிக்க ஆய்வு முடிவைக் கொண்டு பல செய்திகள் நம்மிடையே வலம் வருகின்றன 

அது குறித்த எனது குறு விளக்கம் நேற்று நியூஸ்18 தொலைக்காட்சியில் வெளியானது 

இங்கு நம் சொந்தங்களுக்கும் அது குறித்த எனது விளக்கம் பின்வருமாறு 

அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு சுமார் 7.5 லட்சம் கொரோனா நோயாளிகளை 
வைத்து செய்யப்பட்ட மீளாய்வில் அவர்களிடம் இருந்து கண்டறியப்பட்டதாக கூறப்படும் செய்தி தான் 

"O" ரத்த வகையினருக்கு  மற்ற வகையினரை விடவும் 9-18% கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறியிருக்கின்றனர் 

அவர்களும் கூட O ரத்த வகயினருக்கு முற்றிலும் முதலுமாக கொரோனாவே வராது என்று கூறவில்லை 

காரணம் அவர்கள் ஆராய்ச்சி செய்த அமெரிக்காவில் வாழும் கருப்பு இன அமெரிக்கர்களுள் "ஓ" வகை ரத்தம் இருப்பவர்களுக்கு ஏனைய உலகவாசிகளை விட அதிக அளவு தொற்று ஏற்பட்டுள்ளது. 

மேலும் அந்த ஆய்வின் முடிவில் AB ரத்த க்ரூப் இருப்பவர்களுக்கு வாய்ப்பு அதிகம் 
என்றும் கூறப்படுகிறது 

இந்த வகை ஆய்வுகளை 
Correlation study என்போம் 

அதாவது ஒரு நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்பு சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்து அந்த இடத்தில் இருந்தவர்கள் மீது பழி சுமத்துவது போன்றதாகும். 

உதாரணத்துக்கு ஒரு க்ரைம் ஸ்டோரியை கற்பனை செய்து கொள்வோம். 

ஒருவரின் சாட்சியம் இது 

தூரத்தில் துப்பாக்கி சத்தம் கேட்டது. 
நான் பால்கனியில் இருந்து பார்த்தேன். 
அப்போது ஒருவர் சரிந்து விழுந்து கிடந்தார். 
இன்னொருவர் தலையில் தொப்பியுடன் அந்த இடத்தை விட்டு ஓடினார் 

  இதுவே சாட்சியம்

அவர் கூறும் ஆதாரங்களை வைத்து அந்த கொலை காரன் தலையில் தொப்பி மாட்டியிருந்தது தெரிகிறது என்று போலீஸ் கூறினால் சரியாக இருக்குமா? 

மேலும் அவர் தலையில் முடி இல்லாமல் இருந்ததால் அதை மறைக்கவே தொப்பி மாட்டியிருக்கிறார்

எனவே தலையில் முடியில்லாதவர்களை நாம் உடனே விசாரிக்க வேண்டும்.  

தலையில் நன்றாக முடி வைத்திருப்பவர்களை வெளியே சுற்ற விடுங்கள் என்றும் கூறுவது அபத்தமான ஒன்றாகத்தானே இருக்கும். 

அது போல தான் பல நேரங்களில் இந்த Correlation studyகளும் அமைந்து விடும். 

இதே போன்ற ஒரு ஆய்வு முடிவு தலை சொட்டையாக இருக்கும் ஆண்களுக்கு கோவிட்19 வந்தால் மிகவும் ஆபத்தான ஒன்றாக முடியும் என்று கூறியது. 

ஆனால் அதன் உண்மை நிலை என்ன? 

யாருக்கு கோவிட்19 பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது? 
70 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு. 
அவர்கள் தலையில் முடியிருக்குமா? 
சொட்டையாக இருப்பார்களா? 

அவர்களுள் 95% பேருக்கு தலையில் முடி இருக்காது. 

இதை வைத்து ஆய்வு முடிவு வெளியிட்டு 
சிறு வயதில் தலையில் சொட்டை விழும் பலரை பயமுறுத்துகிறார்கள் 

இதே போன்று தான் இந்த ரத்த வகை குறித்த ஆய்வு முடிவுமாகும் 

கோவிட் 19 வருவதற்கு
வெறும் 9-18% குறைவான ரிஸ்க் "ஓ" வகையினருக்கு இருக்கிறது 

ஏபி ரத்த வகையினருக்கு அதிக ரிஸ்க் இருக்கிறது என்று கூறுகின்றனர்
இதுவும் ஒரு சந்தர்ப்பங்களைஅடிப்படையாக வைத்து செய்யப்படும் ஆய்வாகும் 

சந்தரப்பங்கள் முழுவதும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை 

Correlation is Not causation 

எனவே 

ஓ ரத்த வகை கொண்ட மக்கள் இந்த ஆய்வு முடிவை வைத்துக்கொண்டு சகஜமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வெளியே சுற்றித்திரியலாம் என்றும் நினைக்க வேண்டாம். 

மற்ற வகை நண்பர்கள் நமக்கு கொரோனா வந்துவிடும் என்று அஞ்சி நடுங்கவும் வேண்டாம். 

கொரோனா தொற்று வரும் வாய்ப்பு 
அனைத்து ரத்த வகையினருக்கும் கிட்டத்தட்ட சமமாகவே இருக்கிறது. 

நமது அலட்சியம் அதை இன்னும் எளிதாக்கிவிடக்கூடாது 

அலட்சியமும் அச்சமும் தேவையில்லை 

எச்சரிக்கை உணர்வு போதுமானது.

Dr.A.B. ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை

Friday, June 12, 2020

புத்தர் தேடிய புத்தொளி

கௌதம புத்தரின் கடுந்தவப் பயிற்சியானது  ஆறாண்டு காலம் நீடித்தபோதிலும், அவர் எண்ணிய புத்தொளியை அவரால் காண முடியவில்லை...

உலகத் துன்பத்திற்கான காரணத்தையும், அத்துன்பத்தை தீர்ப்பதற்கான தீர்வையும் அவரால் அறிய முடியவில்லை...

அவர் கொடும்பசியால் துன்புற்று  நிரஞ்சனை ஆற்றங்கரையின் அருகில் இருந்த ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார்...

அப்போது அவர், பசியாலும், தாகத்தினாலும்  உடல் மெலிந்து, மனம் தடுமாறி போகும் ஒருவனால் புத்தொளியைக் காண முடியாது என்பதை உணர்ந்தார்...

மன அமைதி இல்லாத ஒருவனால் மனதினால் அடையக்கூடிய இலக்கை அடைய முடியாது என்பதையும், உடலின் தேவைகள் தீர்க்கப்படுவதன் மூலம்தான் உண்மையான அமைதி கிடைக்கும் என்று கருதினார்...

எண்ணம்தான் எல்லாவற்றி்ற்கும் அடிப்படையாக இருக்கிறது என்றும்,   ஒருவரது உடல் செயல்படுவதும், செயல்படாமல் இருப்பதும் அவரது எண்ணத்தின் அடிப்படையில்தான் என்று கருதினார்...

எண்ணம் இன்றி இயங்கும் உடல் நாயைப் போன்றது என்றும், அதனால் எண்ணங்களை கட்டுப்படுத்துவதுதான் சரியான வழிமுறை என்றும் கண்டுணர்ந்தார்...

அவரது கடும் விரத முறைப் பயிற்சியானது முழுமையான அறிவைப் பெறுவதற்கோ அல்லது விடுதலைப் பெறுவதற்கோ பயன்படாது என்று கருதி்யவர்,அதை கைவிட்டு ஔியைத் தேடி வேறிடம் செல்ல எண்ணினார்....

            பாபாசாகேப் அம்பேத்கர்

Thursday, June 11, 2020

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்-அதிகாரம்: ஆள்வினையுடைமை குறள் எண்: 619



ஒரு ஊரில் ராமசாமியும், அவரது மனைவியும் வாழ்ந்து வந்தனர். 

அவ‌ர்க‌ள், கிடைக்கின்ற குறைந்த வருமானத்தை வைத்து  வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒரு நாள் ராமசாமி தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும்பொது த‌ரையில் மிகவும் பழங்கால காசு ஒன்று கிடைப்ப‌தை பார்த்தார்.

அந்தக் காசின் நடுவில் ஒரு துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைத்தால் அதிர்ஷ்டம் என்று பெரியோர் அடிக்கடி சொல்லியிருப்பது ராமசாமிக்கு நினைவிற்கு வர‌, உடனே அந்த துளையிட்ட காசை எடுத்து தன் சட்டைப் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டார்.

இந்த துளையிட்ட காசு கிடைத்ததால், நிச்சயம் அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், நான் பணக்காரன் ஆகிவிடுவேன் என்று மனதுக்குள் நினைத்தார் ராம‌சாமி.

அந்த காசு கிடைத்த அன்றைய தினத்தில், ராமசாமிக்கு மற்ற நாட்களைவிட அதிக வருமானம் கிடைத்தது. அதிக வருமானம் கிடைத்ததற்கு இந்த அதிர்ஷ்ட‌ காசு தான் கார‌ண‌ம் என்று நினைத்தார். 

அன்று முதல் அந்த அந்த காசை ஒரு சிறு துணியில் பொதிந்து பத்திரமாக ச‌ட்டை பையில் பாதுகாத்து வந்தார். ஒவ்வொருநாள் வெளியே கிளம்பும்போதும் அந்த‌ காசுள்ள‌ துணி பொதியை அன்றைக்கு அணியும் ச‌ட்டைப்பையில் வைத்துவிடுவார்.

இப்படியே சில ஆண்டுகள் கடந்தன...

ராமசாமிக்கு பணம், புக‌ழ், பதவி எல்லாம் வந்து சேர்ந்தது. பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம்... "அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போல் இருக்கிறது" என்று கூறிக் கொண்டே த‌ன் சட்டைப் பாக்கெட்டில் இருந்து பொதியை வெளியே எடுத்தார். பொதியை பிரித்து க‌சை பார்த்த‌தும் ராமசாமி மிகுந்த‌ அதிர்ச்சி ஏற்ப‌ட்ட‌து. 

அதிர்ச்சிக்கு காரணம் என்னனா... அந்த துணிப்பொதியில் இருந்த காசில் துளையே இல்லை. 

என்ன ஆயிற்று...? குழப்பத்துடன் மனைவியைப் பார்த்தார்...

அதற்கு ராமசாமியின் மனைவி, "என்னை மன்னிச்சிருங்க‌, உங்கள் சட்டைல தூசி அதிகமாக இருக்கிறதே என்று எடுத்து வெளியே உதறினேன். அப்போது சட்டைப் பையில் இருந்த காசு தெருவில் விழுந்து விட்டது. நான் வெகுநேரம் தேடியும் அந்த காசு கிடைக்கவில்லை. அதனால் நான்தான் வேறு ஒரு காசை பொதிந்து உங்கள் சட்டைப் பாக்கெட்டில் போட்டு வைத்தேன்" என்றாள். 

"இது எப்போது நடந்தது..?" என்று ராம‌சாமி கேட்க‌, "அது அந்தக் காசு கிடைத்த மறுநாளே.." என்றாள். 

அவர் அமைதியாக சிந்தித்தார். 

உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை, த‌ன்னுடைய நாண‌ய‌மும்,உழைப்பும், விடாமுய‌ற்சியும்தான் என்று புரிந்த‌ ராமசாமி மிகுந்த உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தார்.

அதிர்ஷ்ட‌ம் என்ப‌து நேர‌த்திலோ, பொருளிலோ, ந‌ம்பிக்கையிலோ, சில‌ரின் வாழ்த்திலோ இலை. அது ந‌ம்முடைய‌ தொட‌ர் உழைப்பிலும் தோல்வி க‌ண்டு துவ‌ளா ம‌ன‌ உறுதியிலும்தான் இருக்கிற‌து. இதைத்தான் வ‌ள்ளுவ‌ரும்...

Sunday, June 7, 2020

ஒரே சமயத்தில் உத்திரப்பிரதேச அரசின் 25 வெவ்வேறு பள்ளிகளில் ஒரே நேர‌த்தில் பணியாற்றிய‌தாக‌ ஆவ‌ண‌ங்க‌ள் உருவாக்கி ஒரு.1 கோடி வரை ஊதியம் என்ற‌ பெய‌ரில் ஏமாற்றி அப‌க‌ரித்த‌ ஆசிரியை ஒருவ‌ர் நேற்று, ஜூன் 6, கைது செய்யப்பட்டுள்ளார்.

உ.பி.யின் அரசு பள்ளிகளிலும் பிற‌ நிர்வாக‌ துறைக‌ளிலும் பல்வேறு வகை ஊழல் புகார்கள் அடிக்க‌டி வருவது உண்டு. இவை அனைத்தையும் மிஞ்சும் வகையில் தற்போது வெளியாகியுள்ள புகார், பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி விட்டது.

இம்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கஸ்தூரிபா காந்தி சிறுமிகள் பள்ளி (கே.ஜி.பி.வி) எனும் பெயரில் நடுநிலைப்பள்ளிகள் நடைபெறுகின்றன. தங்கிப் பயிலும் வசதிகளுடனான இதில் பெண் ஆசிரியர்கள் மட்டுமே அமர்த்தப்படுகின்றனர்.

இவர்களில், பெரும்பாலனவர்கள் ஒப்பந்த ஊதியமாக ரூ.30,000 பெறுபவர்கள். இவர்களை பற்றிய விவரங்களை டிஜிட்டல் முறையில் தொகுக்க உ.பி. மாநில கல்வித்துறை முடிவு செய்தது.

கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்ற‌ பணியில், "அனாமிகா சுக்லா" எனும் பெயரில் ஒரு ஆசிரியை 25 பள்ளிகளின் பதிவேடுகளில் இருப்பது தெரிந்துள்ளது. 

ஒப்பந்த பணியிலான அவர் பிப்ரவரி வரை 13 மாதங்களாக 25 பள்ளிகளிலும் ஊதியம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உபி மாநில அடிப்படை கல்வித்துறை, விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று மதியம் அனாமிகா சுக்லா போலீஸரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கீழே ப‌ட‌த்தில் இந்த‌ பூனையும் பால் குடிக்குமாங்க‌ற‌ மாதிரி உக்கார்ந்து இருப்ப‌வ‌ர்தான் செல்வி சுக்லா.

Friday, May 15, 2020

மகதை மண்டலம் வெண்பார்(வெண்பாவூர்) நடுகல் கோயில்.


ஆறகழூர் அருகே ராயப்பனூர் என்ற ஊரை ஆண்ட வன்னிய பாளையக்காரர்கள் காங்கேயமுடையார்கள் என்பவர்களின் முன்னோர்களின் நடுகல் கோயில் நடுவலூர்.

#காங்கேயமுடையார்கள்

பாய் பக்கெட் பிரியாணி - திருச்சியில் சிறந்த ஹைதராபாத் பாசுமதி பிரியாணி

பிரியாணியைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அப்படிப்பட்ட பிரியாணியை தேடி பிடித்து உண்பது எனது பொழுதுபோக்கு. தமிழ் நாட்டை பொறுத்த வரை இது வரை நான் சாப்பிட்ட பிரியாணிகளிலேயே சிறந்த பிரியாணி வாணியம்பாடி 🌟 பிரியாணி. மேலும் திருச்சி நகரில் அதிகமாக கிடைக்கும் பிரியாணி சீரக சம்பா அரிசியில் செய்யப்பட்ட தம் பிரியாணி. பல முறை பாசுமதி அரிசி பிரியாணியை தேடி அலைந்த அனுபவம் உண்டு. சில நாட்களுக்கு முன் நண்பன் ஒருவன் அவனது பிறந்த நாளை முன்னிட்டு மதியம் சாப்பிட கள்ளுகுளியில் இருக்கும் பாய் பிரியாணி கடைக்கு அழைத்துச் சென்றான். அது வரை அந்த கடையை பற்றி பெரிதாக கேள்வி பட்டது இல்லை. கடையும் ஆரம்பித்து சில மாதங்கள் தான் ஆகிறது. எனக்கு எப்பவும் போல் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்தேன். பிரியாணி பரிமாறப்பட்டது. உண்மையில் பாசுமதி பிரியாணி இதற்கு முன் நான் சென்னை சென்ற போது அதிகமாக விரும்பி உண்ணும் வழக்கம் இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு என் முன். சாப்பிட்டு பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல பிரியாணி சாப்பிட்ட திருப்தி. விலை ரு 150 மட்டும் தான். சிக்கன் பிரியாணி யின் விலை ரு 80.

அங்கிருந்து கிளம்பும் போது அந்த கடையின் நிறுவனர் திரு தஸ்தகீர் அவர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் இந்த பிரியாணி வியாபாரத்தில் கடந்த 12 வருடங்களாக ஈடுபட்டுள்ளார். அவர் மேலும் கூறும் போது குறைந்த விலையில் சிறந்த சேவை வழங்கி வருவதாக கூறினார்.

நிஜமாகவே எனக்கு விருப்ப உணவாக இப்போது பாய் பிரியாணி மாறிவிட்டது. நீங்களும் திருச்சி செல்ல நேர்ந்தால் கண்டிப்பாக ஒரு முறை சென்று வரவும்.

முகவரி மற்றும் அலைபேசி என்னை இதனுடன் இணைத்துள்ளேன்.

பாய் பக்கெட் பிரியாணி
சிட்டி யூனியன் பைனான்ஸ் எதிரில்
சேது ராமன் பிள்ளை பேருந்து நிறுத்தம் அருகில்
கல்லுக்குலி
திருச்சி 620020
அலைபேசி: 9884189786

Monday, May 11, 2020

உலக செவிலியர்கள் தினம் !


வாழும்
அன்னை தெரசாக்கள்
செவிலியர்கள் !

மனிதநேயம் மிக்கவர்கள்
மனித உயிர் காப்பவர்கள்
செவிலியர்கள் !

நோயாளியின் நோய்
நீக்கும் நேயர்கள்
செவிலியர்கள் !

தன்னைத் தேய்த்து
வாசம் தரும் சந்தனங்கள்
செவிலியர்கள் !

தன்னை உருக்கி
ஒளி தரும் மெழுகுகள்
செவிலியர்கள் !

சங்கடப்படாத
சாதனையாளர்கள்
செவிலியர்கள் !

நொந்து கொள்ளாத
நல்ல உள்ளங்கள்
செவிலியர்கள் !

தூக்கம் தவிர்த்து
காத்து நிற்பவர்கள்
செவிலியர்கள் !

உடல் நலம் பெற
ஓய்வின்றி உழைப்பவர்கள்
செவிலியர்கள் !

தன் உயிர் உருக்கி
பிறர் உயிர் காப்பவர்கள்
செவிலியர்கள் !

இனிய சொல் சொல்பவர்கள்
வன்சொல் சொல்லாதவர்கள்
செவிலியர்கள் !

ஆறுதல் சொல்லி
தேறுதல் தருபவர்கள்
செவிலியர்கள் !

உடல்காயம் மட்டுமல்ல
மனக்காயமும் ஆற்றுபவர்கள்
செவிலியர்கள் !

மருத்துவர்கள் எள் என்றால்
எண்ணையாய் நிற்பவர்கள்
செவிலியர்கள் !

பொறுமையின் சின்னங்கள்
அன்பின் அடையாளங்கள்
செவிலியர்கள் !

ஆண் பெண் இரு பாலிலும்
உள்ள சொக்கத் தங்கங்கள்
செவிலியர்கள் !

Saturday, May 9, 2020

ஸ்வீடனின் நிஜ இளவரசி கரோனா காலத்தில் என்ன செய்தார் தெரியுமா ?

தனியாக ஒரு பண்ணை வீட்டில் 3 மாதங்களுக்கு தேவையான மளிகை சாமான் வாங்கிட்டு ஸ்விம்மிங் பூல் , பார் என்று செட்டில் ஆகவில்லை. அவருக்கு சொந்தமான ஸ்டாக்ஹோமில் உள்ள  மருத்துவமனையில் பணியாளராகச் சென்றார். ( கரோனாவால் ஸ்வீடனில் 24000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். )  .  கிச்சனில் உதவி செய்வது ,  மருத்துவமனை & உபகரணங்களை  ( equipment) சுத்தம் செய்வது ,  கிருமி நாசினி தெளிப்பது ,  போன்ற உதவிகளை செய்து வருகிறார்.  தனக்கு கரோனா பரவி விடுமோ என்று ஊரை விட்டு ஒதுங்கி உயிருக்குப் பயந்து  ஓடாமல் கரோனா இருக்கும் களத்துக்குள்ளே இறங்கி வேலை செய்யும் இளவரசி வாவ்.

அவர் வாலிப வயதிலே தென் ஆப்ரிக்கா, கானா , செனகல் போன்ற நாடுகளுக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளின் நல வாழ்வுக்காக பல பணிகளை மேற்கொண்டவர்.

Saturday, May 2, 2020

ஜோனாஸ் எட்வர்ட் சால்க் - போலியோ தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர்

ஜோனாஸ் எட்வர்ட் சால்க் ஒரு அமெரிக்க மருத்துவர், மருத்துவ ஆராய்ச்சியாளர் மற்றும் வைராலஜிஸ்ட் ஆவார்.இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு??


இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு patented right, வாங்க மறுத்து விட்டார்(அதாவது கண்டுபிடிப்பு உரிமம்) இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார். 
ஆனால் அப்படி செய்திருந்தால், பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்! பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்!

பல்லுவன் பாட்டு - கேரளா

                   (photo taken in 1910)

பல்லுவன் பாட்டு என்பது பாம்பு கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் உயர் சாதியினரால் நிகழ்த்தப்படும் பாம்பு வழிபாட்டின் ஒரு வடிவமாகும்.  கேரளாவின் பல்வார் குடிகளின் வாழ்க்கை பாம்புகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.  அவர்கள் பாம்பு கடவுள்களைத் தங்கள் தெய்வங்களாகக் கருதி பாடல்களைப் பாடுகிறார்கள்.

 பல்லுவன் என்பது பல்லுவர் என்ற தாழ்த்தப்பட்ட சாதிக் குழுவின் ஆண் உறுப்பினர் (பெண் புள்ளுவட்டி).

பலு என்ற சொல்லுக்கு பறவை என்று பொருள்.  பல்லுவன் என்ற சொல்லுக்கு ‘பறவைகளின் சத்தத்திலிருந்து கணிக்கும் நபர்’ என்று பொருள்.  பல்லுவா சமூகத்தில் பல துணைப்பிரிவுகள் உள்ளன.  அவர்களில் பெரும்பாலோர் நாகம்பட்டிகல் (பாம்பு-பாடல்களைப் பாடுபவர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள்.  நாகம்பட்டிகல் இல்லாத புல்லுவர்கள் உள்ளனர்.  அவர்கள் ப்ரீதாம்பட்டிகல் (பேய் பாடல்களைப் பாடுபவர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள்.  சடங்கு நடைபெறும் வீடுகளின் பெண்கள் முல்லுதாரா தேவி கோவிலில் பாம்பு நடனம் செய்கிறார்கள்.

சடங்கு நடைபெறும் வீட்டின் பெண்கள் பாம்பு நடனம் செய்கிறார்கள் (சர்பம் துல்லால். நடன நாளுக்கு ஏழு அல்லது ஒன்பது நாட்களுக்கு முன்னர் சிக்கன நடவடிக்கைகள் தொடங்குகின்றன. தூய்மையற்றதாகக் கருதப்படும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள்.

 பாம்பு நடனம் நடைபெறும் விதானம் (பந்தல்) பனை இலைகள், மல்லிகைப் பூக்கள்,  சம்பகா, தாமரை, ஆலமர இலை, வெற்றிலை,  மற்றும் தேங்காய் பூக்களின் கிளைகளால் அலங்கரிக்கப்படும்.  பாம்பின் வடிவம் வெள்ளை அரிசி தூள் மற்றும் வண்ண தூள் கொண்டு வரையப்படுகிறது.  சர்ப்பத்தின் வடிவம் வரையப்பட்ட ஓவியத்தை சுற்றி ஒரு குறிப்பிட்ட வரிசையில் சடங்கை நடத்துகிறார்.

 நாகராஜா, நாகயாக்ஷி, சர்பயாட்சி, மணினாகம், எரினாகம், கரினாகம், குஜினாகம், பரணாகம் மற்றும் கன்யா என தெய்வங்கள் உள்ளன. 

மரைக்காயர் (மரக்கலராயர்) Maraikkayar


தமிழ் இசுலாமியரில் மரைக்காயர் என்றொரு பிரிவுண்டு.இவர்கள் தமிழ் பூர்வகுடிகளில், இசுலாமியத்தை கிபி6 க்கு பிறகு தழுவிய தமிழர்களே "அரையர்"எனும் மீனவ இனமரபினர்.

மரக்கலங்களை செலுத்தும் தொழில் நுட்பம் தெரிந்த தமிழ் நெய்தல் நிலத்து போர்க்குடிகளே இவர்கள்.
கிபி 10 ம் நூற்றாண்டில் நடந்த காந்தளூர் போருக்குப்பின்னே, நாஞ்சில் நாட்டின் கடற்கரைவாழ் மாந்தரின் வீரத்தை மெச்சியே,மாமன்னன் முதலாம் ராஜராஜசோழன் இவர்களில் திறமைமிக்கவர்களை தேர்வு செய்து தம்படைகளில் அமர்த்தியதாக வரலாறு கூறுகிறது.
இதில் சேர நாட்டு வில்வித்தையில் சிறந்தவர்கள் வில்லவ+அரையர் வில்லவராயர்கள் என்றழைக்கப்பட்டனர். 
மரக்கலங்களை போர்முனையில் செலுத்தும் திறன் பெற்றவர்கள் மரக்கலம்+அரையர்= மரக்கலஅரையர் என அழைக்கப்பெற்றனர்.
அரையர் இனத்தின் நீட்சியாக மரக்கலஅரையர்- மரக்கலராயர் -மரக்காயர் என திரிபுபெற்ற மரக்காயர் எனும் தமிழ் நெய்தல் குடி இசுலாம் மார்க்கத்தை ஏற்றபின்னே இன்று தமிழகம் முழுதும் விரவிக்கிடக்கின்றனர்.

Thursday, April 30, 2020

மிஷ்கல் மசூதி. குட்டிச்சிரா.காலிகட். கேரளா. கி.பி 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது

மிஷ்கல் மசூதி.  குட்டிச்சிரா.காலிகட். கேரளா.
 கி.பி 7 ஆம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் கேரளாவில் பரவியது என்று நம்பப்படுகிறது, கொடுங்கல்லூரில் உள்ள சேரமன் ஜுமா மசூதி அந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று ஒரு கூற்று உள்ளது. அரேபியர்களுக்கு மலபார் பிராந்திய மக்களுடன் வர்த்தக தொடர்பு இருந்தது, முசிரி மிகவும் பிரபலமான துறைமுகமாக இருந்தது.
 காலிகட் / கோழிக்கோட்டில் கி.பி 14 ஆம் நூற்றாண்டில் இரண்டு அழகான மரத்தினால் கட்டமைக்கப்பட்ட மசூதிகள் உள்ளன, அவற்றில் ஒன்று இந்த மிஷ்கல் மசூதி, முதலில் அதில் ஐந்து கதைகள் இருந்தன, ஒரு பணக்கார அரபு கப்பல் உரிமையாளர் நகூதா மிஷ்கால் கட்டப்பட்டது.
கி.பி 1510இல் போர்த்துகீசிய இராணுவத் தாக்குதலின் போது மசூதி எரிக்கப்பட்டது, பின்னர் இது கி.பி 1579 இல் மேல் மாடி இல்லாமல் அசல் வடிவத்திற்கு புனரமைக்கப்பட்டது, இந்த வழிபாட்டுத் தலத்தின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், பிரார்த்தனை மண்டபத்திற்கு 47 கதவுகள் உள்ளன, நான்கு தூண்களை ஆதரிக்கும் 24 தூண்கள் உள்ளன, இது இன்னும் கூடுதல் மாற்றங்கள் இல்லாமல் பராமரிக்கப்படுகிறது.
 இந்த மசூதி தூய இடைக்கால கேரள கோயில் கட்டிடக்கலை பாணியில் மினராசை கழித்து கட்டப்பட்டுள்ளது, மேலும் இந்த மசூதிக்கு அருகில் ஒரு அழகான பெரிய தொட்டி உள்ளது, இது இந்து கோவில்களில் உள்ளதைப் போலவே உள்ளது. 
 படங்கள்: கூகிள் படங்கள்.

களத்தில் பொறந்த ஊருக்கு புகழ சேரு - புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே காந்தி நகர் 6ஆம் தெருவில் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள்...

அவர்களின் வருமானம் ஊரடங்கு சட்டத்திற்கு முன்பே கேள்விக்குறியாக தான் இருக்கும்...

தற்போது உள்ள ஊரடங்கு  சட்டத்தால் மேலும் அவர்கள் வாழ்க்கை கேள்வி கேட்பாரின்றியே அமைந்து விட்டது... 

அங்கு பொறந்த ஊருக்கு புகழ சேரு அமைப்பை சேர்ந்த தோழர்கள் அவர்களுக்கு தேவையான 150 லிட்டர் பால் அரிசி காய்கறிகள் சமையல் எண்ணெய் சேமியா பாக்கெட் பிஸ்கட் மற்றும் மினரல் வாட்டரோடு அவர்கள் வசிக்கும் புதுக்கோட்டை காந்திநகர் 6-ஆம் வீதிக்கு சென்று 80 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.

கணேஷ் நகர் துணை ஆய்வாளர் திரு குணசேகரன் அவர்கள் கலந்து கொண்டு பாதுகாப்பு வழங்கினார்  ..

நன்றி : பொறந்த ஊருக்கு புகழ சேரு
Pops

சென்னையில் ஏன் அதிகமான தொற்றாளர்கள் கண்டறியப்படுகிறார்கள்?



சென்னையில் இதுவரை கண்டறியப்பட்ட நோய் தொற்றாளர்களுள் 98% பேர் அறிகுறிகள் ஏதுமற்ற தொற்றாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

சென்னை சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட பெருநகரமாகும். 
சென்னையின் மக்கள் தொகை அடர்த்தி 
ஒரு சதுர கிலோமீட்டருக்கு 27000 பேர். 

நோய் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களைக் கண்டறிய நம்மிடம் இருக்கும் ஒரே அஸ்திரம்- பரிசோதனை மட்டுமே. 

தமிழ்நாட்டிலேயே அதிகமான பரிசோதனைகள் சென்னை பெருநகரத்தில் செய்யப்படுகின்றன. இதன் விளைவாக நோய் தொற்று கண்டறியப்படுவதும் அதிகமாக இருப்பது இயற்கையானதே 

ஏற்கனவே இருக்கும் நோய் தொற்றாளர்களை  அதிகமான பரிசோதனை மூலம் தற்போது கண்டறிந்து வருவது ஆரோக்கியமானது 

அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்துவது மூலம் தொற்று பரவும் சங்கிலி அறுபடும். 

ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட பெருநகரில் தினமும் 100 முதல் 150 தொற்றாளர்கள் கண்டறியப்படுவது என்பது மிகச் சாதாரணமானது.  

எனவே மக்கள் பீதியடையத் தேவையில்லை. 

அதிகமான பரிசோதனைகள்  செய்யப்படும் போது 
நோய் தொற்றாளர்கள் வெளியே தெரிவது இயற்கை 

இது நன்மைக்கே..

 மற்ற மாவட்ட மக்கள் சென்னை சொந்தங்களை கரித்துக்கொட்ட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் 

அவர்களின் ஊரில் நாம் இல்லை 
அவர்கள் வாழும் வாழ்க்கையை நாம் வாழவில்லை.
எனவே அவர்களுக்கு ஆறுதல் கூறுவேண்டுமே அன்றி அவர்களை குற்றம் கூறி புண்படுத்தக்கூடாது 

அவர்கள் நல்ல முறையில் ஊரடங்கை கடைபிடிப்பதால் தான் 
நூறு நோய் தொற்று என்று ஏறுகிறது 

இல்லாவிடில் இந்நேரம் அங்கு மட்டும் லட்சம் தொற்றுகள் ஏற்பட்டிருக்கும் 

Source : Dr.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை

சீனாவின் திடீர் முடிவு முழு உலகையும் உலுக்கியது

சீனா இன்று உலகை ஆச்சரியப்படுத்தும் வகையில் பங்கு பரிவர்த்தனைகளில் அமெரிக்கா டாலரை ரத்து செய்து, டாலருக்கு பதிலாக சீன யுவனை பயன்படுத்த அதிகாரப்பூர்வ முடிவு செய்தது, இது சீனாவின் பொருளாதார வரலாற்றில் ஒரு தைரியமான மற்றும் முக்கியமான படியாகும்.  இதன் காரணமாக அமெரிக்க டாலர் சீன யுவானுக்கு எதிராக வலுவாக வீழ்ச்சியடையும்.  மேலும் அனைத்து உலக சந்தைகளும் இந்த முடிவால் திகைத்துப் போயின.  இந்த செய்தி இன்று பிபிசி ஆங்கில தொலைக்காட்சியில் பிற்பகல்  விவாதிக்கப்பட்டது.  இந்த முடிவை எதிர்கொண்டு அமெரிக்கா முட்டாள்தனமாக செயல்பட்டால் புறக்கணிக்க முடியாத பேரழிவுகரமான போருக்கு உலகை இட்டுச்செல்லக்கூடிய பொருளாதார யுத்தமாக மாறக்கூடும் !!  சீனா 2021 உலகத்தை வழிநடத்தும்.  இது சீனாவின் பழைய கனவு. மேலும் சீனா ஒரு தனி டிஜிட்டல் நாணய மின்-ஆர்.எம்.பி. e-RMB யை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு பெரிய பொருளாதாரத்தால் இயக்கப்படும் முதல் டிஜிட்டல் நாணயமாக அமைக்கப்பட்டுள்ளது.


 சில அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை டிஜிட்டல் நாணயத்தில் மே முதல் பெற வேண்டும் என சீனா கூறியுள்ளது. டிஜிட்டல் கட்டண தளங்களின் பிரபலமடைந்து வருவதற்கும், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மக்கள் உடல் தொடர்பைத் தவிர்ப்பதற்கும் பணப் பயன்பாட்டில் சரிவு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Source: The guardian)

Wednesday, April 29, 2020

ஆதிமனிதன் யார்.அவன் பேசிய மொழி என்ன?



தமிழியின் செப்புமொழி செம்மைவடிவத்தின் காலம் ஏறத்தாழ கிமு50000.சாத்தூர் சேகரன்போன்ற ஆய்வாளர்கள் ஒத்துக்கொண்டது.
ஆதிமனிதனின் ஜீனோம் ஆய்வு கிமு 200000-275000 வரை இட்டுச்செல்கிறது.
மதங்களின் புராணங்களின் மனிததோற்றுவாய் கிமு 6000-9000 வரை செல்கிறது.

எனில் ஆதிமனிதன் யார்.அவன் பேசிய மொழி என்ன?

கல்லூரி மாணவர்களுக்கு கரோனா வைரஸ் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 10.02.2020



அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கந்தர்வகோட்டை சார்பாக கல்லூரி மாணவர்களுக்கு கரோனா வைரஸ் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 10.02.2020 திங்கள் அன்று நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் திரு தமிழ் செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அதிகாரி மருத்துவர் ஜெயபிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு கரோன வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி விரிவாக விளக்கம் அளித்தார். புதுநகர் ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவ அதிகாரி மருத்துவர் ஹரி விக்னேஷ் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தடுப்பு முறைகள் பற்றி செயல் விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் புதுநகர் சுகாதார நிலையத்தின் அதிகாரிகள் முத்துகுமார் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் விரிவுரையாளர்கள் கிருஷ்ணவேணி, உத்திராபதி, வெங்கட் ராஜ், வீரப்பன், வேல்முருகன் மற்றும் பொருளாளர் மணிவேல் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை கல்லூரி யின் இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் சையது ஆலம் ஏற்பாடு செய்திருந்தார்.