கௌதம புத்தரின் கடுந்தவப் பயிற்சியானது ஆறாண்டு காலம் நீடித்தபோதிலும், அவர் எண்ணிய புத்தொளியை அவரால் காண முடியவில்லை...
உலகத் துன்பத்திற்கான காரணத்தையும், அத்துன்பத்தை தீர்ப்பதற்கான தீர்வையும் அவரால் அறிய முடியவில்லை...
அவர் கொடும்பசியால் துன்புற்று நிரஞ்சனை ஆற்றங்கரையின் அருகில் இருந்த ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார்...
அப்போது அவர், பசியாலும், தாகத்தினாலும் உடல் மெலிந்து, மனம் தடுமாறி போகும் ஒருவனால் புத்தொளியைக் காண முடியாது என்பதை உணர்ந்தார்...
மன அமைதி இல்லாத ஒருவனால் மனதினால் அடையக்கூடிய இலக்கை அடைய முடியாது என்பதையும், உடலின் தேவைகள் தீர்க்கப்படுவதன் மூலம்தான் உண்மையான அமைதி கிடைக்கும் என்று கருதினார்...
எண்ணம்தான் எல்லாவற்றி்ற்கும் அடிப்படையாக இருக்கிறது என்றும், ஒருவரது உடல் செயல்படுவதும், செயல்படாமல் இருப்பதும் அவரது எண்ணத்தின் அடிப்படையில்தான் என்று கருதினார்...
எண்ணம் இன்றி இயங்கும் உடல் நாயைப் போன்றது என்றும், அதனால் எண்ணங்களை கட்டுப்படுத்துவதுதான் சரியான வழிமுறை என்றும் கண்டுணர்ந்தார்...
அவரது கடும் விரத முறைப் பயிற்சியானது முழுமையான அறிவைப் பெறுவதற்கோ அல்லது விடுதலைப் பெறுவதற்கோ பயன்படாது என்று கருதி்யவர்,அதை கைவிட்டு ஔியைத் தேடி வேறிடம் செல்ல எண்ணினார்....
பாபாசாகேப் அம்பேத்கர்
No comments:
Post a Comment