முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான்.
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான்.
மகாராசாதி ராச ஸ்ரீபரமேசுவரன்,
எம்மண்டலமும் கொண்டருளியவன்,
எல்லாம் தலையானான் பெருமாள், கச்சி
வழங்கும் பெருமாள்,
கோதண்டராமன் போன்ற பட்டப்பெயர்களினைப் பெற்றான். இவனது காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியதாகக் கருதப்படுகின்றது.
சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த இவன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் சிறப்புற்று விளங்கினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் இறுதிச்சோழ மன்னனாக அறியப்படும்
மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் சோழர் வம்சம் முற்றிலும் அழிந்ததற்கான காரணங்களில் இம்முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் சோழ நாட்டுப் படையெடுப்பும் ஒரு முக்கிய காரணம்
- கண்ணனூரில் நடைபெற்ற கொப்பத்துப் போரில் போசாள மன்னன் வீரராம நாதனை தோற்கடித்து அவன் தளபதி சோமன் என்பவனைக் கொன்றான்.
- இலங்கையின் திரிகோணமலையில் ஆட்சி செய்த தம்பர்லிங்கா(தாய்லாந்து) அரசன் சந்திரபானுவின் மீது படையெடுத்து வெற்றி பெற்று யானைகள் மற்றும் மணிகள் அனைத்தினையும் திறையாகப் பெற்றான்.
- பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கனை போரில் வென்று அவனது தலைநகரான சேந்தமங்கலத்தை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். பல்லவ மன்னனின் யானை,குதிரை மற்றும் பிற செல்வங்கள் அனைத்தினையும் கவர்ந்து கொண்டு சேந்தமங்கலத்தினை ஆளும் பொறுப்பினைக் கோப்பெருஞ்சிங்கனிடமே அளித்தான்.
- தெலுங்குச் சோழ மன்னனான விசயகண்ட கோபாலனை போரில் கொன்று காஞ்சிமாநகரைக் கைப்பற்றி விசயகண்ட கோபாலனின் தம்பிக்கு ஆட்சிப் பொறுப்பினை அளித்தான். வடநாடு சென்று காகதீய மன்னன் கணபதியைப் போரில் வென்றான். நெல்லூரைக் கைப்பற்றி வீராபிடேகம் செய்துகொண்டான்.
No comments:
Post a Comment