தனியாக ஒரு பண்ணை வீட்டில் 3 மாதங்களுக்கு தேவையான மளிகை சாமான் வாங்கிட்டு ஸ்விம்மிங் பூல் , பார் என்று செட்டில் ஆகவில்லை. அவருக்கு சொந்தமான ஸ்டாக்ஹோமில் உள்ள மருத்துவமனையில் பணியாளராகச் சென்றார். ( கரோனாவால் ஸ்வீடனில் 24000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ) . கிச்சனில் உதவி செய்வது , மருத்துவமனை & உபகரணங்களை ( equipment) சுத்தம் செய்வது , கிருமி நாசினி தெளிப்பது , போன்ற உதவிகளை செய்து வருகிறார். தனக்கு கரோனா பரவி விடுமோ என்று ஊரை விட்டு ஒதுங்கி உயிருக்குப் பயந்து ஓடாமல் கரோனா இருக்கும் களத்துக்குள்ளே இறங்கி வேலை செய்யும் இளவரசி வாவ்.
அவர் வாலிப வயதிலே தென் ஆப்ரிக்கா, கானா , செனகல் போன்ற நாடுகளுக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளின் நல வாழ்வுக்காக பல பணிகளை மேற்கொண்டவர்.
No comments:
Post a Comment